சிறுமி ஆயிஷா கொலை சந்தேக நபருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 June 1, 2022

டுலுகமவில் சிறுமி ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இம்மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 29 வயதுடைய சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் பண்டாரகம, அடுலுகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாத்திமா ஆயிஷா கடந்த வெள்ளிக்கிழமை அடுலுகம பிரதேசத்தில் காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

09 வயதுடைய மேற்படி சிறுமி கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

விசாரணையில், குழந்தை பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும், வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பாத்திமா ஆயிஷா கோழி இறைச்சி வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு சென்றபோது காணாமல் போனதாக கூறப்படுகிறது.

சிசிரிவி காட்சிகளில் சிறுமி காணாமல் போகும் முன், கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றமை தெரியவந்தது.

அவரின் உடல் அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

தொடர்பான செய்தி: வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்: ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு

Comments