வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்: ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு

🕔 May 30, 2022

டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஆயிஷா, நீரில் வலுக்கட்டாயமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (27) தனது வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்குச் சென்ற 09 வயது சிறுமிஆயிஷா, வீடு திரும்பாததால் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர் மறுநாள் (28) அவரின் சடலம் வீட்டுடுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அவருடைய பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை அல்லது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேக நபரால் குழந்தை வலுக்கட்டாயமாக நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் கொலை தொடர்பில் 29 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிறுமியின் அதே பிரதேசத்தை (அட்டலுகம) சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்