துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதி

🕔 June 1, 2022

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சற்று முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவு (சிஐடி) அதிகாரிகள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

துமிந்த சில்வாவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை காவலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த இடைக்கால உத்தரவை அமுல்படுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உதவுமாறு சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டை முடக்கிய நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

துமிந்த சில்வா அனுபவித்து வந்த மரண தண்டனையிலிருந்து அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

இதனையடுத்து வெளியில் வந்த துமிந்த சில்வாவுக்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை சவாலுக்குட்படுத்தி ஹிருணிகாக பிரேம சந்திர, ஹிருணிகாவின் தயாார் உள்ளிட்ட மூவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்தனர்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கு உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்