தலைப்புச் செய்திகள்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விமலின் மனைவிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு

போலி கடவுச்சீட்டு பெற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரின் பிணை கோரிக்கை மனு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை கொண்டு, இரண்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில், அவருக்கு 02 வருட சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்தவாரம் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்குட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக சஷி வீரவங்ச கொழும்பு மேல் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை மேன்முறையீடு செய்திருந்தார்.

குறித்த மேன்முறையீட்டு மனு தொடர்பான பரிசீலனை திங்கட்கிழமை வரைஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சஷி வீரவங்ச இன்று நீதிமன்றில் முன்னிலையானார்.

இந்தநிலையில் அவரை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்பான செய்தி: தீர்ப்புக்கு எதிராக சஷி வீரவன்ச மேன்முறையீடு