சீனத் தூதுவர் கல்முனைக்கு விஜயம்: உலருணவு, விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைப்பு

🕔 May 26, 2022

– நூருல் ஹுதா உமர் –

லங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஜன்ஹொங் இன்று (26) இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததொரு, வறிய மக்களுக்கான உலருணவுப் பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றினை வழங்கி வைத்தார்.

சீன – இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக சீன தூதரகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒருகட்டமாக அம்பாறை மாவட்ட உதைப்பாந்தாட்ட கழகங்களுக்கான உதைப்பந்து விளையாட்டு பொருட்களும், பாதணியும் வழங்கும் நிகழ்வும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வறுமைக்கோட்டுக்குள் உள்ள குடும்பங்களுக்கான உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இன்று மாலை கல்முனையில் நடைபெற்றது.

‘ஸ்போர்ட்ஸ் பர்ஸ்ட்’ பௌண்டசனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அதன் இணைத் தவிசாளர் ஏ.ஜி.எம். அன்வர் நௌசாத் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் மற்றும் அவரது பாரியார் ஜின் ஜியாங் கலந்து கொண்டு தேவையுடைய மக்களுக்கு உணவுப்பொருட்களையும், விளையாட்டு கழகங்களுக்கான பந்து மற்றும் பாதணிகளை கையளித்தனர்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். ரக்கிப், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மதநாயக்க, கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், கல்முனை மாநகர சபை பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொலிஸ் உயரதிகாரிகள், சீன தூதரக உயரதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள், பிராந்திய விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், ஸ்போர்ட்ஸ் பர்ஸ்ட் பௌண்டசனின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் (24) தொடக்கம் கிழக்கு மாகாணத்துக்கான விஜயமொன்றினை சீனத் தூதுவர் மேற்கொண்டு வருகின்றார்.

கிழக்கு மாகாணத்துக்கானஅவரின் முதல் விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்