நாடாளுமன்றில் சண்டித்தனம்: விஜித ஹேரத் எம்.பியை சனத் நிஷாந்த தாக்க முயற்சித்த காட்சி வீடியோவில் சிக்கியது

🕔 May 23, 2022

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, நாடாளுமன்றத்தில் இருந்தபோது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவமொன்று கடந்த 20ஆம் திகதி நடந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த கடந்த 18ஆம் திகதி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையிலிருந்து நாடாளுமன்ற அமர்வுக்கு அழைத்து வரப்பட்டிருந்த போதே, கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த 09ஆம் திகதி பொதுஜன பெரமுன நடத்திய தாக்குதல்களில் பங்கேற்றமைக்காக சனத் நிஷாந்த தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதது பொதுஜன பெரமுனவினர் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையின் போது, வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் நாடாமன்றத்தில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை அச்சுறுத்தும் விதத்தில் சனத் நிஷாந்த எழுந்து வந்து அவரை நோக்கிச் செல்ல முயற்சிக்கின்றமை கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற பாதுகாவலர் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்தவை தடுத்து, அவரின் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்