அவசரகால நிலைமை நாட்டில் இல்லை: என்ன காரணம்?

🕔 May 21, 2022

நாட்டில் அமுலாக்ககப்பட்டிருந்த அவசரகால நிலைமை நேற்றிரவு (20) முதல் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 06ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.

அவசரகால நிலைமையை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளபோதும், அது நிறைவேற்றப்பட்ட 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அங்கிகாரம் பெறப்படுதல் வேண்டும்.

எனினும், 14 நாட்களுக்கு மேலாகியும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் அது ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால நிலைமை நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் நீக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்