ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை

🕔 May 18, 2022

ந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பர் 9-ம் திகதி தீர்மானம் நிறைவேற்றியது.

சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் 161வது பிரிவின் கீழ் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் 2018 செப்டம்பர் ஆறாம் திகதியன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து இவர்கள் எழுவரையும் விடுதலை செய்ய அப்போதைய அதிமுக அரசாங்கம் முடிவெடுத்து ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியிருந்தது. ஆனால், அந்த பரிந்துரை மீது முடிவெடுப்பதில் தமிழ்நாடு ஆளுநர் கால வரம்பற்ற தாமதம் செய்தார்.

இதை சுட்டிக்காட்டியே அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

முன்னதாக, இந்த வழக்கின் விசாரணையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தங்கள் கருத்தைத் தெரிவித்த நீதிபதிகள், ஆளுநரின் அணுகுமுறை கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்துவிடும் என்று தெரிவித்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்