அமெரிக்காவின் நிவ்யோக் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் காயம்

🕔 April 12, 2022

மெரிக்காவின் நிவ்யோக் நகரில் இன்று செவ்வாய்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை வெடிக்காத பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் அவையெதுவும் வெடிக்கும் நிலையிலுள்ள சாதனங்கள் அல்ல என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நிவ்யோக்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க ரயில் சேவை நிலையத்தில் இந்த துப்பாக்சிச் சூடு நடந்துள்ளது.

வாயு முகமூடி மற்றும் கட்டுமான வேலைகளின் போது பயன்படுத்தும் ஓரஞ்சு நிற அங்கி அணிந்திருந்த கறுப்பினத்தவர் என வர்ணிக்கப்படும் சந்தேக நபர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் சன்செட் பூங்காவில் உள்ள 36வது வீதி என்ற சுரங்கப் பாதை ரயில்நிலையத்தில் நடந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்