
நாட்டில் நாளாந்த அடிப்படையில் எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் 800 தொடக்கம் 1,000 மில்லியன் ரூபா வரையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் டீசல் விற்பனை மூலம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 110 ரூபாவும், பெட்ரோல் ஒரு லீற்றரர் விற்பதால் 52 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக கூறியுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தற்போது வீழ்ச்சியடைந்து வருவதால், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தினசரி இவ்வாறு நஷ்டத்தை சந்தித்து வருகிறது.



