பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தெரிவு

🕔 April 11, 2022

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப், அந்நாட்டின் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஆவார்.

ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் பிரதமர் பதவிக்காக எதிர்கட்சிகள் முன்மொழிந்த கூட்டு வேட்பாளராக இருந்தார்.

இன்று திங்கட்கிழமை பிற்பகலில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டபடி அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார்.

வாக்கெடுப்பில் ஷாபாஸ் ஷெரீஃபுக்கு 174 வாக்குகள் கிடைத்தன. இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்மொழிந்த பிரதமர் வேட்பாளரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.

முன்னதாக, இன்று காலையில் நாடாளுமன்ற அமர்வு தொடங்கியவுடன், இம்ரான் கானின் கட்சி எம்.பிகள் அனைவரும் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.

தொடர்பான செய்தி: இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீரமானம் வெற்றி: ஆட்சியில் இருந்து வெளியேற்றப்படும் முதல் பிரதமராகிறார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்