தலைப்புச் செய்திகள்

அரசாங்கத்திலிருந்து விலகிய 41 எம்.பிகளுடன் பேச ஜனாதிபதி அழைப்பு: இன்றிரவு சந்திப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

காபந்து அரசாங்கத்துக்கான முன்மொழிவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 07 மணிக்கு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகள், காபந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் முன்னராக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.