10 மணித்தியாலயங்களுக்கு மேல், மின் வெட்டு நீடிக்கப்படலாம்: மிச்சார சபை வட்டாரங்கள் தெரிவிப்பு

🕔 March 30, 2022

டுத்த வாரத்தில் இருந்து நாட்டில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் பணிகள் நேற்று முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று (30) முதல் – பல பகுதிகளில் 10 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற உற்பத்தி நிலையங்கள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு இலங்கை மின்சார சபை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரிசக்தி அமைச்சு – தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

இதேவேளை, அரச ஊழியர்கள் இன்றும் நாளையும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

மின்சாரத்தை சேமிக்கும் முயற்சியில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை முன்மொழிந்துள்ளது.

மின்வெட்டு காலத்தை குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணிநேரம் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நம்புகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்