அரிசி ஏற்றுமதியின் போது, ஏனைய நாடுகளை விடவும் அதிக விலையை இலங்கை வழங்குவதாக மியன்மார் தெரிவிப்பு

🕔 March 2, 2022

இலங்கைக்கு மியன்மார் அரிசி ஏற்றுமதியின்போது, மற்ற நாடுகளை விட அதிக விலையைப் பெறுகிறது என்று அந்த நாட்டின் முன்னணி பத்திரியைான குளோபல் நிவ் லைட் ஒஃப் மியன்மார் (Global New Light of Mynmar) தெரிவித்துள்ளது.

மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை டொன் ஒன்றுக்கு 340 – 350 அமெரிக்க டொலருக்கு இடையில் உள்ளது என்றும், இலங்கைக்கு ஒரு டொன் 440 முதல் 450 வரை வழங்கப்படுவதாகவும் அந்தச் செய்தியில், அரிசி மொத்த விற்கனைக் களஞ்சியசாலையின் செயலாளரை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மியன்மாரின் அரிசி கடந்த வருடம் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அது வெற்றியடைந்துள்ளது. இலங்கை அண்டை நாடுகளில் ஒன்றாகும். மியான்மர் கடல் வழியாக இலங்கைக்கும் அரிசியை ஏற்றுமதி செய்ய முடியும்” என்றும் அரிசி மொத்த விற்கனைக் களஞ்சியசாலையின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கான அரிசி ஏற்றுமதி மிகவும் குறைவாகவே உள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தற்போது, ​​இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் 100,000 டொன் வெள்ளை அரிசி மற்றும் 50,000 தொன் புழுங்கல் அரிசியை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் (2022 மற்றும் 2023) இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜனவரி 07 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்