வெளிநாட்டு உல்லாசப் பயணி, மாடியிலிருந்து விழுந்து மரணம்

🕔 February 20, 2022

வெளிநாட்டு உல்லாசப் பயணி ஒருவர் நேற்று (19) சனிக்கிழமை – எல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் இரண்டாம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 28 வயதான செக் நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரது சடலம் தற்போது தெமோதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று இடம்பெறவுள்ளது

Comments