எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பது தொடர்பில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கோரிக்கை

🕔 February 12, 2022

ரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீளவும் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இந்தக் கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த கோரிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள நிலையில், எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்கவேண்டிய அவசியத்தன்மை ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தற்போது டீசல் ஒரு லீற்றருக்காக சுமார் 50 ரூபா நட்டத்தையும், பெற்றோல் ஒரு லீற்றருக்காக சுமார் 15 ரூபா நட்டத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கருத்து தெரிவித்திருந்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, டீசல் ஒரு லீற்றருக்காக 35 ரூபாவும், பெற்றோல் ஒரு லீற்றருக்காக 5 ரூபாவும் நட்டம் ஏற்படுகின்றதென, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறியப்படுத்தி இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், கடந்த ஆறாம் திகதி நள்ளிரவு முதல், எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்