முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதோர், பொது இடங்களில் நுழையத் தடை: சுகாதார அமைச்சு அறிவிப்பு

🕔 February 5, 2022

கொவிட் வைரசுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி ஏற்றிக்கொண்டமைக்கான அட்டைகள் இல்லாமல், போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைவதை ஏப்ரல் 30ஆம் திகதி முதல் தடைசெய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்த வர்த்தமானி அறிவித்தலை இன்று (05) வெளியிட்டுள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, குறைந்தபட்சம் மூன்று டோஸ் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாக கருதப்படுவார்கள்.

அதிகாரிகளால் விலக்களிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனையோர் மேற்படி கட்டுப்பாட்டுக்கு உட்படுவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்