ஜனாதிபதி விருது பெற்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் எம். பெரோஸ்: ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை நடைபெறும்

🕔 February 4, 2022

– முன்ஸிப் –

காலஞ்சென்ற மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸின் ஜனாஸா நல்லடக்கம், இன்று (04) மாலை நடைபெறும் எனத் தெரியவருகிறது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முகம்மது பெரோஸ், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.

1984ஆம் ஆண்டு பகுதி நேர அறிவிப்பாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்ட சனூஸ் எம். பெரோஸ், கடந்த வருடம் ஓய்வு பெற்றார்.

தனது ஒலிபரப்புக் காலத்தில் சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல்வேறு கௌரவங்களை இவர் பெற்றுள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானத்தின் முஸ்லிம் சேவையினுடைய பதில் பணிப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

மக்காவிலிருந்து ஹஜ் நிகழ்வுகளை நேர்முக வர்ணனை செய்வதற்காக, சஊதி அரேபிய மன்னரின் அழைப்பின் பேரில் செல்லும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்திருந்தது.

சனூஸ் முகம்மது பெரோஸ், பேருவளை – மருதானை பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்டவராவார்.

Comments