பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: ஓய்வுபெற்ற வைத்தியரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு

🕔 January 19, 2022

பொரளை ‘ஓல் செயின்ட்ஸ்’ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிலியந்தல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட – ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், இரண்டு வாள்கள், ஒரு ரம்போ கத்தி மற்றும் துப்பாக்கியொன்றும் இவற்றுள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய, பனாமுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணைகளின் போது, குறித்த வைத்தியர் தொடர்பில் தகவல்கள் வௌியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சந்தேக நபரான வைத்தியர், பின்னர் பிலியந்தலை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: பொலிஸார் திட்டமிட்டு கதையொன்றைப் பரப்புகின்றனர்: பொரளை தேவாலய குண்டு விவகாரம் தொடர்பில், மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்