கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் மூடப்பட்டது: 08 பேருக்கு கொவிட்

🕔 January 13, 2022

– பாறுக் ஷிஹான் –

ல்முனை மாவட்ட காணிப் பதிவகத்தில் கொவிட் தொற்றுக்கான 08 பேர் அடையாளங் காணப்பட்டதை அடுத்து, அந்த அலுவலகம் எதிர்வரும் 22 திகதி வரை மூடப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் இன்று (13) மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் இவ்வாறு 8 பேர் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளமையை கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.

குறித்த அலுவலத்தில் பணியாற்றும் 31 உத்தியோகத்தர்களிடம் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொவிட் தொற்று ஏற்பட்டவர்களென அடையாளம் காணப்பட்டவர்கள் – தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொவிட் பரவல் ஏற்பட்ட பின்னர், இக்காணி பதிவகத்தில் 03 ஆவது தடவையாக கொவிட் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Comments