பி.பீ. ஜயசுந்தர ராஜிநாமா: ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்

🕔 December 27, 2021

னாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத், ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் புதிய செயலாளராக நியமிக்கப்படவுள்ள காமினி செனரத், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக கடமையாற்றியவர் என்பதோடு, இலங்கை நிர்வாக சேவையில் அனுபவம் வாய்ந்த அதிகாரியாவார்.

இதேவேளை, பி.பீ. ஜயசுந்தரவின் நடவடிக்கைகள் அண்மைய நாட்களில் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த அமைச்சர்களால் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, பி.பீ. ஜயசுந்தரவை அமைச்சர் சமல் ராஜபக்ஷ கடுமையாக விமர்சித்திருந்தார்.

தற்போதைய கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவும் பி.பீ. ஜயசுந்தரவை அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கடுமையாக சாடியிருந்தார்.

தொடர்பான செய்தி: நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச

Comments

புதிது பேஸ்புக் பக்கம்