உலகின் முதற்தரப் பணக்காரர் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு செலுத்தும் வரித் தொகை குறித்து அறிவிப்பு

🕔 December 21, 2021

லகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி 243 பில்லியன் அமெரிக்க டொலரோடு (இலங்கை மதிப்பில் சுமார் 49 லட்சத்து 14900 கோடி ரூபாய்) முதலிடத்தில் இருக்கும் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு 11 பில்லியன் அமெரிக்க டொலரை (இலங்கை மதிப்பில் சுமார் 02 லட்சத்து 22500 கோடி ரூபாய்) வரியாகச் செலுத்த உள்ளதாக ட்விட் செய்துள்ளார்.

பொதுவாகவே உலகின் பல நாடுகளில் பணக்காரர்கள் குறைவாக வரி செலுத்துவதாக சமூக வலைதலங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் ‘டெஸ்லா’ மின்சார வாகனம் மற்றும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவராக இருக்கும் ஈலோன் மஸ்க் எவ்வளவு வரி செலுத்துவார் என்கிற விவாதமும் எழுந்தது.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டரான எலிசபெத் வாரன், கடந்த வாரம் ஈலோன் மஸ்க்கை மறைமுகமாகக் குறிப்பிட்டு, அமெரிக்காவின் சீர்கேடான வரிச் சட்டங்களை மாற்றுவோம், ‘இந்த ஆண்டுக்கான மனிதர்’ உண்மையில் வரி செலுத்தட்டும், அதே போல மற்ற பில்லியனர்களும் வரிச்சுமையின்றி பலன்கள் அனுபவிப்பதை நிறுத்துவோம் என தன் டுவிட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கடந்த வாரம்தான் ஈலோன் மஸ்க் 2021ஆம் ஆண்டின் ‘பர்சன் ஆஃப் தி இயர்’-ஆக அறிவிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

இந்த விவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈலோன் மஸ்க் தன் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து, நேற்று (20) திங்கட்கிழமை மேற்கூறியபடி இந்த ஆண்டு 11 பில்லியன் டொலரை வரியாகச் செலுத்த உள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்