தங்கல்லயில் சந்தேகத்துக்கிடமான எரிகாயங்களுடன் அமெரிக்கர் மரணம்: பொலிஸ் விசாரணைகள்ஆரம்பம்

🕔 December 16, 2021

மெரிக்க பிரஜையொருவர் தங்கல்ல – சீனி மோதர பகுதியில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த அமெரிக்கர் தங்கல்லயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் தனியாக வசித்து வந்தார்.

54 வயதான அமெரிக்க பிரஜையின் சடலம் வீட்டின் கொல்லைப்புறத்தில் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த அமெரிக்கருக்கு உணவு கொண்டு வந்த பெண் ஒருவர், சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலில் சந்தேகத்திற்கிடமான பல தீக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

திமோதி ரோஜர் (Timothy Roger) எனும் மேற்படி அமெரிக்கர், 2008ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வசித்து வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இறந்தவர் வசிதத வீட்டில் பயன்படுத்தப்பட்ட பல மது போத்தல்கள் மற்றும் எரியுண்ட துண்டுத் துணிகளையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

உயிரிழந்த அமெரிக்கரின் சடலம் திக்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் அவருடைய தாயாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இறந்தவர் அவரின் குடும்பத்தில் இளையவர் என்று தாயார் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்