கடல் பெருக்கத்தினால் சாய்ந்தமருதில் வாடிகள், தென்னை மரங்களுக்கு சேதம்

🕔 December 14, 2021

– யூ.கே. காலித்தீன் –

சீரற்ற கால நிலை காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் கடலரிப்பு அதிகரித்துள்ளது. இதனால், மரங்கள் மற்றும் மீனவர் வாடிகள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

இப்பிரதேசத்தில் கடல் பெருக்கெடுத்தமையினால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதோடு, கரையோரத்தில் இருந்த தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளன.

நேற்றிருந்து இன்று (14) வரை 05 தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளதோ, வாடியொன்று முற்றாகவும் மேலும் 03 வாடிகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலை தொடருமாக இருந்தால் இன்னும் பல வாடிகளும் மரங்களும் பாதிக்கப்படுமெனவும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடல் பெருக்கத்தின் காரணமாக தமது தோணிகள் மற்றும் வள்ளங்களை தரித்து வைப்பதற்கு இடமின்றி அசௌகரியங்களை எதிர்கொள்வதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்