பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை: ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு

🕔 December 4, 2021

க்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை – நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த நிலையில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மீது இரண்டு தடவை தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றதாக லக்ஷ்மன் கிரியெல்ல இதன்போது கூறினார்.

அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி ஆசனங்களை நோக்கி வந்து நாடாளுமன்ற உறுப்பினர் நாணயக்காரவை தாக்க முயற்சிப்பதாக லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தினார்.

அடிப்படையற்ற ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தனிப்பட்ட அவமானங்களை நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார முன்வைப்பதாக அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாணயக்கார இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்