பட்ஜட்: தனித்துப் போன முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்; ‘கல்தா’ கொடுத்தார்கள் உறுப்பினர்கள்

🕔 November 22, 2021

– முன்ஸிப் அஹமட் –

ரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதில்லை என பிரதான முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்து அறிவித்திருந்த போதிலும் அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக நடந்து கொண்டு, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) மாலை நடைபெற்ற போது முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் மட்டுமே, வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் ஹாபிஸ் நசீர் ஆகியேர், வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அந்தக் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் மாத்திரமே வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தார்.

அந்தக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம். முஷாரப், அலிசப்றி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.

தொடர்பான செய்திகள்:

01) பட்ஜட்டுக்கு ஆதரவில்லை; மு.கா தீர்மானம்: 03 எம்.பிகளுக்கு சுகயீனம் என்பதால், உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

02) வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க, மக்கள் காங்கிரஸ் முடிவு: மூன்று எம்.பிகள் இல்லாத நிலையில் ஏகமனதாக தீர்மானம்

Comments