கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகி இரண்டாண்டுகள் பூர்த்தி

🕔 November 18, 2021

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (18) இரண்டாவது ஆண்டு பூர்த்தியாகின்றது.

2019 ஆம் ஆண்டு நொவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 07 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் அவர் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து நொவம்பர் 18 ஆம் திகதி அநுராதபுரத்தில் அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Comments