‘ஃபேஸ்புக் இறந்து விட்டது’: ஹீப்று மொழி குசும்பு

🕔 October 30, 2021

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை நடத்தும் நிறுவனம் தனது பெயரை ‘மெடா’ (Meta) என்று சில நாட்களுக்கு முன்பு மாற்றிக்கொண்ட நிலையில், அது குறித்து தற்போது பலரும் கேலி செய்கின்றனர்.

ஹீப்ரூ மொழியில் ‘மெடா’ என்றால் இறப்பு என்று பொருள் வருவதால் அதைவைத்து ஃபேஸ்புக் நிறுவனம் சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகிறது.

ஃபேஸ்புக் இறந்துவிட்டது என்று பொருள் தரும் வகையில் #FacebookDead என்கிற ஹேஷ் டேகின் கீழ் பலரும் ட்விட்டர் தளத்தில் பதிவிடுகின்றனர்.

ஒரு ட்விட்டர் பயனர் ‘ஹீப்ரூ பேசும் மக்கள் அனைவரும் சிரிக்க ஒரு நல்ல காரணத்தை கொடுத்தமைக்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் மட்டுமே இப்படி பெயர் மாற்ற மொழிபெயர்ப்பு பிரச்சனையால் அனைவரும் பார்த்து சிரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நிறுவனமல்ல.

மொழிபெயர்ப்பின் போது பொருள் மாறிய எடுத்துக்காட்டுகள் பல உள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்