றிசாட் பதியுதீனுக்குப் பிணை: 06 மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்படுகிறார்

🕔 October 14, 2021

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீனுக்கு, இரண்டு வழக்குகளில் இன்று (14) பிணை வழங்கி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று (14) கோட்டே நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, றிசாட் பதியுதீனை 50 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோன்று, றிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த வழக்கிலும் அவருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, றிசாட் பதியுதீனை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை றிசாட் பதியுதீன் வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்துள்ள நீதிமன்றம், அவரின் கடவுச் சீட்டை கையகப்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி றிசாட் பதியுதீன் – அவரின் கொழும்பு வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 06 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்