கொவிட் தொற்றியோருக்கு 09 விதமான நீண்டகால நோய் அறிகுறிகள் காணப்படும்: பேராசிரியர் சந்திம ஜீவேந்திர

🕔 October 3, 2021

கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, 09 விதமான நீண்டகால நோய் அறிகுறிகள் காணப்படும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தைச் சேர்ந்த பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவேந்திர கூறியுள்ளார்.

கொவிட் தொற்று கண்டறியப்பட்டு 90இல் இருந்து 180 நாட்களுக்கு பின்னர் இந்த நீண்டகால நோய் அறிகுறிகள் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் அசாதாரணமான சுவாசம் 08 வீதமானோருக்கும், வயிற்றுக் கோளாறு 08 வீதமானோருக்கும் காணப்படும்.

மேலும் பதகளிப்பு அல்லது மன அழுத்தம் 15 வீதமானோருக்கு ஏற்படும். மார்பு அல்லது தொண்டை வலி 06 வீதமானோருக்கும், அறிவாற்றல் பிரச்சினை 04 வீதமானோருக்கும் ஏற்படும்.

06 வீதமானோருக்கு சோர்வும், 1.5 வீதமானோருக்கு தசை வலியும், ஏனைய வலிகள் 97 வீதமானோருக்கும் ஏற்படும் எனவும் பேராசிரியர் சந்திம ஜீவேந்திர குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகால கொவிட் அறிகுறிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி இருந்தன என்றும், அவை பெண்களில் சற்று அதிகமாகவே காணப்பட்டன என்றும் பேராசிரியர் சந்திம ஜீவேந்திர மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்