அவுஸ்ரேலியாவில் நில நடுக்கம்: கட்டடங்கள், வீதிகள் சேதம்

🕔 September 22, 2021

வுஸ்ரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் இன்று புதன்கிழமை அவுஸ்ரேலிய நேரப்படி காலை 9.15 மணிக்கு விக்டோரியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெல்பர்ன் நகரத்தில் சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார். மேலும் “அவுஸ்ரேலியாவில் நில நடுக்கங்கள் அசாதாரணமானவை. அது மிகவும் வருத்தமான நிகழ்வு” எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலநடுக்கம் தெற்கு அவுஸ்ரேலியா மற்றும் நியூ செளத் வேல்ஸ் பகுதிகளிலும் உணரப்பட்டது. 5.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்துக்குப் பிறகு, 4.0 மற்றும் 3.1 ரிடர் அளவில் அடுத்தடுத்த குறைந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில் அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். விக்டோரியா மாகாண அவசர சேவை அமைப்பு நிலநடுக்கத்துக்குப் பிறகான அதிர்வுகளை எதிர்கொள்ள மக்களை எச்சரித்திருக்கிறது. பலவீனமான கட்டடங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும், வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தை அடுத்து சில வீதிகள் சேதமடைந்துள்ளன. உயர்ந்த சில கட்டடங்கள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்