அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்காணி ஏலம் திடீர் நிறுத்தம்: நிர்வாக உறுப்பினர் அட்டகாசம்

🕔 September 7, 2021

– அஹமட் –

ட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குத் சொந்தமான நெற் காணிகள் இன்று காலை (07) குத்தகை அடிப்படையில் ஏலம் விடப்படவிருந்த நிலையில், அந்த நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

‘அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது’ என, புதிது’ செய்தித்தளம் நேற்று இரவு செய்தியொன்றை வெளியிட்ட நிலையிலேயே, இன்று காலை நடைபெறவிருந்த ஏலம் விடும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதும், சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே – இன்று நடைபெறவிருந்த ஏலம் விடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக, பெரிய பள்ளிவாசலின் செயலாளர் – ‘புதிது’ செய்தித்தளத்திடம் கூறினார்.

இதேவேளை, காணிகள் ஏலமிடப்படவுள்ளதாக கேள்வியுற்று அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்கு சென்றிருந்த இருவரை, பள்ளிவாசலின் நிர்வாக உறுப்பினரொருவர் தூஷண வார்த்தைகளால் திட்டி, தாக்குவதற்கு முயற்சித்துள்ளதோடு, உயிர் அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.

இதுபற்றி பள்ளிவாசலின் செயலாளரிடம் ‘புதிது’ வினவியபோது; “அது தனிப்பட்ட பிரச்சினை” என்றார்.

இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த நிர்வாக உறுப்பினர், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் நெற்காணிகளை மிக நீண்ட காலமாக குத்தகை அடிப்படையில் பெற்று வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற் செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்