புதிது வெளியிட்ட வீடியோ: 03 நாட்களில் சுமார் 11 லட்சம் பேரை சென்றடைந்து சாதனை

🕔 August 24, 2021

புதிது’ செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று, மூன்று நாட்களில் 10 லட்சத்து 79 ஆயிரத்து 341 பேரைச் சென்றடைந்து சாதனை படைத்துள்ளது.

சமூக ஊடகத்தில் ஏற்கனவே வெளியாகியிருந்த வீடியோ ஒன்றை, ‘புதிது’ செய்தித்தளம் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

‘மறைத்தலின் அழகு’ எனும் தலைப்பில் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட அந்த வீடியோ, தற்போது (23ஆம் திகதி, காலை 11.30 வரை 10 லட்சத்து 79 ஆயிரத்து 341 பேரைச் சென்றடைந்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் சில காலங்களுக்கு முன்னர் ‘புதிது’ செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று, சுமார் 50 லட்சம் பேரைச் சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பிலும் நாம் செய்தியொன்றை வெளியிட்டிருந்தோம்.

புதிது செய்தித்தளத்துக்கு வாசகர்கள் வழங்கும் ஆதரவுக்கு நன்றிகள்.

குறித்த வீடியோவைக் காண: மறைத்தலின் அழகு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்