குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரை பிணையில் விடுவிக்க உத்தரவு

🕔 June 16, 2021

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோதமான முறையில் ஆயுதக் களஞ்சியசாலையொன்றை நடத்திச் சென்றதாக போலி சாட்சியங்களை முன்வைத்த குற்றச்சாட்டில் கம்பஹா மேல் நீதிமன்றின் உத்தரவுக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, கம்பஹா மேல் நீதிமன்றின் உத்தரவுக்கமைய,  ஷானி அபேசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

இந்த விளக்கமறியல் உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பான தீர்ப்பை இன்று அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப காவல்துறை பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்குமாறு கம்பஹா மேல் நீதிமன்றுக்கு உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்