எச்சரிக்கை; அதிக வெப்பத்தை உணரும் போது வலிப்பு ஏற்படலாம்: உஷ்ணத்தைச் சமாளிப்பது எப்படியெனத் தெரிந்து கொள்ளுங்கள்

🕔 April 5, 2021

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இன்னும் 10 நாட்டிளுக்கு நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதிக வெப்பம் காரணமாக தலைவலி, வலிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையும் ஏற்படும்.

எனவே, அதிக வெப்பத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி நாம் அறிந்திருத்தல் அவசியமாகும். அவை குறித்து பார்ப்போம்.

  • அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
  • வெள்ளை நிற அல்லது கடும் நிறமல்லாத, மெல்லிய, இறுக்கமில்லாத ஆடைகளை அணிய வேண்டும். குளிர்மைக் கண்ணாடி அணிவது நல்லது.
  • வெளியில் வேலை செய்பவர்கள் தொப்பியணியலாம், குடையைப் பயன்படுத்தலாம். ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகத்தில் சுற்றிக் கொள்ளலாம்.
  • எலுமிச்சை ஜூஸ், மோர் ஆகியவை உடம்பின் நீர் இழப்பை ஈடு செய்யும் என்பதால், இவ்வறினை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
  • வெப்பத்தினால் ஏற்படக்கூடிய தலைவலி, வலிப்பு, அரிப்பு, பக்கவாதம், தலைசுற்றல் மற்றும் குமட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படின் உடன் மருத்துவரை அணுக வேண்டும்.
  • மின் விசிறி மற்றும் ஈரத்துணிகளை பயன்படுத்துதல், அடிக்கடி குளிர்ந்த நீரில் குளித்தல் வேண்டும்.
  • தொழிலாளர்கள் நேரடியாக சூரிய ஒளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வேலை செய்யும் பொழுது, கூடுதல் ஓய்வு நேரம் எடுத்து கொள்ள வேண்டும்.
  • நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையோ அல்லது செல்ல பிராணிகளையோ விட்டுச் செல்லக்கூடாது.
  • வெயிலில் செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • டீ, கொஃபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீரைக் குறைக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்