ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

🕔 March 24, 2021

ஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘Sputnik V’ கொவிட் தடுப்பூசி 07 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக அந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக இலங்கை மக்கள் தொகையில் 14 மில்லியன் பேருக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கடந்த தினம் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையினால் இலங்கையினுள் அவசர தேவைக்கு பயன்படுத்த ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்