தலைப்புச் செய்திகள்

பிரதேச செயலாளர்களுக்கு எதிராக 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்; விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிப்பு

பிரதேச செயலாளர்களுக்கு எதிராக சுமார் 200 ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் 200 க்கும் அதிகமான முறைப்பாடுகள் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை பிரிவினூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணைகளில் குற்றவாளிகளாக அடையாளங் காணப்படுவோருக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் மக்களுக்கு ஆற்றப்படும் சேவைகளை உரிய வகையில் முன்னெடுக்காத அதிகாரிகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.