ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு

🕔 March 7, 2021

ஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இதுவரை தீர்வு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து கொழும்பு பேராயர் இல்லத்தினால் அறிவிக்கப்பட்ட கருப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

கறுப்பு ஞாயிறு குறித்த தெளிவுபடுத்தல்களை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கமைய, இன்றைய தினம் கத்தோலிக்க மக்கள் கறுப்பு ஆடை அணிந்து ஞாயிறு ஆராதனைகளில் கலந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கறுப்பு ஞாயிறானது ஒரு நாள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் தின தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்படும் என இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்த போதிலும் அது இதுவரை நிகழவில்லை”.

எனவே அமைதியான முறையில் அதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தவுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்