கொவிட் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை, வேண்டுமென்றே அரசாங்கம் இழுத்தடிக்கிறது: எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

🕔 March 1, 2021

கொரோனாவினால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கிய வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை வேண்டுமென்று அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்எச்ஏ. ஹலீம் – கண்டியில் வைத்து குற்றம் சாட்டியுள்ளார்.

உடல்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள போதிலும், போதிய வழிகாட்டுதல்கள் இல்லை என தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தாமதப்படுத்திவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஈஸ்டர் தின தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை உள்ளுர் அதிகாரிகள் கண்டுபிடிக்க தவறியுள்ளதால், சர்வதேச விசாரைணகள் அவசியம் என எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

2019 ஈஸ்டர் தின தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு குறித்து மக்களுக்கு நம்பிக்கை காணப்பட்ட போதிலும், அது எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு உண்மைகளை கண்டுபிடிக்கவில்லை என்பது அறிக்கை மூலம்; தெரியவந்துள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னால் யார் உள்ளனர்? யார் தற்கொலை குண்டுதாரிகளிற்கு உதவினார்கள்? என்பதை மக்கள் அறிந்துகொள் விரும்புகின்றனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையால் நாடு திருப்தியடைய முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments