கொரோனா தொற்று உடல்களை அடக்கம் செய்ய அனுமதி: நள்ளிரவில் வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

🕔 February 26, 2021

கொரோனாவால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்கும் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதற்கிணங்க, கடந்த 10 மாதங்களாக கொரோனா பாதிப்புக்குள்ளான உடல்கள் தகனம் மட்டும் செய்யப்படும் அரசாங்கத்தின் கொள்கை முடிவுக்கு வந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் செய்வதை வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதற்கிணங்க, நேற்று 25ஆம் திகதி வரையில் கொரோனாவால் மரணித்தத்தாகக் கூறப்படும் 459 பேர் இதுவரை தகனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் மிக அதிகளவானோர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லிம்கள் பல்வேறு வழிகளிலும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில், தற்போது உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்