உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றிய ஹரீன்: சாதாரண தரம் சித்தியடையாதவர் என்றவருக்கு ‘டோஸ்’

🕔 February 26, 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தான் பெற்ற பெறுபேறுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் அமைச்சர் ஒருவர், ஹரீன் பெனாண்டோ – க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை எனக் கூறியபோது, தனது தகைமையை வெளிடுவேன் என ஹரீன் குறிப்பிட்டிருந்தார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவில், க.பொ.த. சாதாரண தரம் கூட சித்தியடையாதவர்கள் உள்ளனர் என, பேராயர் மெல்கம் ரஞ்சித் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனை ஐக்கிய ஹரீன் பெனாண்டோ நாடாளுமன்ற அமர்வில் சுட்டிக் காட்டிப் பேசிய போது, ஹரீனை நோக்கி பேசிய அமைச்சர் ஒருவர்; “நீங்களும் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையவில்லை” எனக் கூறினார்.

இதனையடுத்தே, தனது கல்வித் தகைமையினை ஹரீன் வெளிப்படுத்தியுள்ளார்.

Comments