கல்முனையில் 27 நாட்களின் பின்னர், தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம்

🕔 January 25, 2021

– பாறுக் ஷிஹான் –

ல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி வீடு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட்டிருந்த பகுதிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணியளவில் நீக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த இப் பிரதேசங்களில் கொவிட் தொற்று  நிலைமை குறைவடைந்ததை தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி வீடு வீதி வரை, 27 நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.  இதனையடுத்து இப்பகுதியில் மூடப்பட்டிருந்த கடைத்தொகுதிகளில் துப்பரவுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

மூடப்பட்ட கல்முனை பிரதான நகர் சந்தைப் பகுதியை சுகாதார நடைமுறைகளைப பின்பற்றி திறப்பதற்கான ஒழுங்குகளை உரிய தரப்பினர் எடுத்துள்ளனர்.

இதேவேளை கல்முனை கடற்கரை பள்ளி கொடியேற்றம் நிறைவுற இரு நாட்கள் உள்ள நிலையில், அங்கு மக்கள் அதிகளவாக  ஒன்று கூடுவதை தவிர்ப்பதற்காக ராணுவத்தினரும் பொலிஸாருஇம் இணைந்து பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.

Comments