எழுத்தாளர் நூறுல் ஹக் காலமானார்

🕔 January 25, 2021

– அஹமட் –

ழுத்தாளர், ஊடகவியலாளர் – சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம்.எம். நூறுல் ஹக் என்று திங்கட்கிழமை காலமானார்.

சில காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஏறாவூர் வைத்தியசாலைகளில் இவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் ஏறாவூரிலுள்ள அவரின் மகளின் வீட்டில் அன்னார் இன்று வபாத்தானார்.

ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள இவர், பத்திரிகைகளில் தொடராக கட்டுரைகள் மற்றும் பத்திகளையும் எழுதி வந்தார்.

இவர் எழுதிய புத்தகங்களில் ‘முஸ்லிம் பூர்வீகம்’ குறிப்பிடத்தக்கதாகும்.

கிழக்கு மாகாண ‘ஊடக வித்தகர்’ விருதுக்கு இவர் அண்மையில் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தார். அந்தத் தகவலை நூறுல் ஹக் – கடந்த 15ஆம் திகதி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

தொடர்பான செய்தி: சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை தொடர்பில் நூறுல் ஹக் எழுதிய ‘யார் துரோகிகள்’ நூல் வெளியீடு

Comments