ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசியை இலங்கையில் பயன்டுத்த அனுமதி

🕔 January 22, 2021

கொவிட் 19க்கான ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பு மருந்தை, நாட்டில் அவசரகாலத்துக்குப் பயன்படுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

இதனை ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேவையான ஒத்திகைகள் எதிர்வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும், தடுப்பூசி தொடர்பான ஒழுங்குமுறை பணிகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்தை மேற்கோள்காட்டி, ராஜாங்க அமைச்சர் தகவல் வெளியிட்டார்.

ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பு மருந்தினை சாதாரண குளிரூட்டியில் பாதுகாத்து வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஃபைசர் தடுப்பு மருந்தினை -70 (மைனஸ் 70) குளிரில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்