கொவிட் தடுப்பூசி தயாரிக்கும், இந்தியாவின் ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் தீ விபத்து

🕔 January 21, 2021

ந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான, ‘புனே’யிலுள்ள ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான ‘கொவிஷீல்ட்’ தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இத்தீவிபத்து அந்நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக கட்டடத்தில்தான் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பாக சீரம் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் ஆதர் பூனாவாலா செய்துள்ள ட்வீட்டில், ‘இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. மேலும் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். கட்டடத்தின் சில தளங்கள் மட்டும் சேதமாகியுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எதனால் இந்த தீபத்து ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாக தெரியவரவில்லை என்றும் கொவிட் தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் கட்டடத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது நிம்மதியான விஷயம் என்றும் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சர் ராஜேந்திர சின்ஹான் கூறியுள்ளார்.

ஒக்ஸ்ஃபோர்ட் – அஸ்ட்ரசெனகாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகள் இங்குதான் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான தடுப்பூசிகள் இங்கு தயார் செய்யப்படுகின்றன.

இந்தியா மட்டும் அல்லாது, பல நாடுகளும் இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளையே சார்ந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்