ரஞ்சனுக்கு நியாயம் கிடைக்கும் வரை, கறுப்பு சால்வை அணியும் போராட்டம்; நாடாளுமன்றில் ஹரீன் ஆரம்பித்தார்

🕔 January 20, 2021

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுக்கு ஆதரவாக, இன்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ கறுப்புச் சால்வை அணியும் போராட்டமொன்றை நாடாளுமன்றில் ஆரம்பித்தார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்று புதன்கிழமை ஹரீன் உரையாற்றுகையில்; ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் வழங்கப்பட்டு, அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் வரை, கறுப்புச் சால்வையை நாடாளுமன்றில் தொடர்ந்தும் அணியப் போவதாகத் தெரிவித்து, தான் கொண்டு வந்திருந்த சால்வையை அணிந்து கொண்டார்.

தொடர்ந்து பேசிய ஹரீன்; அண்மையில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது தன்னை நோக்கி கூறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஹிட்லர், சார்லி சப்ளின் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களுக்கும் சிறிய மீசைகள் இருந்த போதும், ஹிட்லர் உலகை அழ வைத்ததாகவும், சார்லி சப்லின் உலகை சிரிக்க வைத்ததாகவும் கூறினார்.

அண்மையில் அம்பாறையில் உரையாற்றிய ஜனாதிபதி தனக்கு இரண்டு பக்கங்கள் (கதாபாத்திரங்கள்) உள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்