பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரை அறைந்த குற்றச்சாட்டில், உறுப்பினர் கைது: இருவரும் ஒரே கட்சியினர்

🕔 January 19, 2021

மிஹிந்தலை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இந்திக்க ருக்ஷான், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சபையின் எதிர்க்கட்சித் தலைவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இன்று கைதானார்.

இன்றைய தினம் பிரதேச சபைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்க்கட்சித் தலைவர் நிஸார் முகம்மட் என்பவரை, உறுப்பினர் இந்திக்க ருக்ஷான் அறைந்து தாக்கினார்.

தாக்குதலுக்குள்ளானவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை அடுத்து, மிஹிந்தலை பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்தனர்.

வீடியோ

Comments