பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கு கொரோனா: மூடப்பட்டது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

🕔 January 8, 2021

ல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் இருவர், கொவிட் தொற்றாளர்களாகக் கண்டறியப்பட்டமையைத் தொடர்ந்து அந்த ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மனியங்கள் ஆணைக்குழுவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பரிசோதனை மேற்கொண்டபோது, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதியானதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரின் நேரடி தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட 50 பேருக்கு நேற்று பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதன்போது மற்றொரு ஊழியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இதனால், பாதிக்கப்பட்ட இரண்டாவது நபரின் நண்பர்கள் என அடையாளம் காணப்பட்ட ஊழியர்களின் மற்றொரு குழுவினருக்கு இன்று பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு திங்கட்கிழமை (11) மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் பேராசிரியர் அமரதுங்க கூறியுள்ளார்.

இந்த நிலை காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், எனவே ஆணைக்குழுவின் சில முக்கியசேவைகளை தற்காலிகமாக பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்