தவறாக நேரம் காட்டும், சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுரம்: சரி செய்யுங்கள் தவிசாளரே

🕔 January 5, 2021

– ஹனீக் அஹமட் –

ம்மாந்துறை சந்தைப் பகுதி சுற்று வட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மணிக்கூட்டுக் கோபுரம், நீண்ட காலமாக சரியான நேரம் காட்டாமல் நின்று போயுள்ளது.

ஆயினும் இது குறித்து உரிய தரப்பினர் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை.

குறித்த கோபுரத்திலுள்ள மணிக்கூடுகள், 12 மணியினையே எப்பொழுதும் காட்டியவாறு உள்ளன.

மிக முக்கியமான பொது இடமொன்றில் வைக்கப்பட்டுள்ள மணிக்கூடுகள் இவ்வாறு ஓடாமல் இருப்பதை வைத்து, அந்தப் பிரதேசத்தின் உள்ளுராட்சி சபையினை மக்கள் குறை மதிப்பீடு செய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.

எனவே, குறித்த மணிக்கூடுகளை ஓட வைக்க, சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளரே, இது உங்களின் கவனத்துக்கு.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்