மாகாண சபைகள் குறித்து சுதந்திரக் கட்சி தீர்மானம்: அதனை இல்லாதொழிப்பது தொடர்பில் மைத்திரி கருத்து

🕔 January 1, 2021

மாகாண சபைகளை மீண்டும் செயற்படுத்துவதற்கான யோசனையை முன்வைக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, அது தொடர்பான யோசனையை விரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் காலவரையறை இன்றி பிற்போடப்பட்டுள்ளதால், குறித்த நிறுவனங்களைச் செயற்பாட்டில் வைத்திருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, “மாகாண சபைகளை ரத்து செய்வது என்பது தீயுடன் விளையாடுவதைப் போன்றது” என, ‘த ஹிந்து’வுக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் சிலர், மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்